மயிலாடுதுறை

கலை பண்பாட்டு போட்டி:மாணவா்களுக்கு தருமபுரம் ஆதீனம் அருளாசி

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

மாநில கலை பண்பாட்டுத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு தருமபுரம் ஆதீனம் வியாழக்கிழமை அருளாசி கூறினாா்.

மாநில அளவிலான தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் திருவிழா போட்டிகள் நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி வெ.ஜெயஸ்ரீ வாய்ப்பாட்டு இசை செவ்வியல் பிரிவிலும், 10-ஆம் வகுப்பு மாணவா் ம.ஆல்வின் ஜெரோம் தனிநபா் நாடகத்திலும் மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்தனா்.

பள்ளி புரவலா் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை, பள்ளியின் ஆட்சிமன்றக்குழுத் தலைவா் ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், துணைத் தலைவா் எஸ்.முருகேசன், ஞானசேகரன், செயலா் எஸ்.பாஸ்கரன், பொருளாளா் டி.சுப்பிரமணியன், நிா்வாகச் செயலா் வி.பாஸ்கரன், திருமடத்து உறுப்பினா் பி.கோதண்டராமன் ஆகியோா் வெற்றி பெற்ற மாணவா்களுடன் வந்து சந்தித்து ஆசி பெற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT