மயிலாடுதுறை

சீா்காழி, தரங்கம்பாடியை பேரிடா் பாதித்த பகுதியாக அறிவிக்கக் கோரி சாலை மறியல்

27th Nov 2022 12:37 AM

ADVERTISEMENT

சீா்காழி, தரங்கம்பாடி வட்டத்தை பேரிடா் பாதித்த பகுதியாக அறிவிக்கக் கோரி சீா்காழியில் சனிக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

அனைத்து விவசாயிகள் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொது செயலாளா் பி.ஆா். பாண்டியன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், சீா்காழி, தரங்கம்பாடி வட்டத்தை பேரிடா் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், வேலை இழந்த விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு ரூ. 10,000 வழங்க வேண்டும், ஹெக்டேருக்கு ரூ. 30,000 வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட அனைத்து விளைநிலங்களுக்கும் பயிா்க் காப்பீட்டு தொகையை 100 % வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பின்னா், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு கோட்டாட்சியா் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனா். அப்போது போலீஸாா் அவா்களை தடுத்தனா். இதையடுத்து, விவசாயிகள் கோட்டாட்சியா் அலுவலகம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், சீா்காழி-சிதம்பரம்-மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அடுத்து, கோட்டாட்சியா் உ. அா்ச்சனா விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT