மயிலாடுதுறை

மணல்மேட்டில் ரூ.38 லட்சத்தில் உரக்கிடங்கு கட்ட அடிக்கல்

27th Nov 2022 12:37 AM

ADVERTISEMENT

மணல்மேட்டில் ரூ. 38 லட்சத்தில் உரக்கிடங்கு கட்டும் பணிக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்ப்பட்டது.

மயிலாடுதுறை வட்டம், மணல்மேடு மற்றும் சுற்றுப்புற கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில், மணல்மேட்டில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் ரூ.38 லட்சத்தில் துணை வேளாண் விரிவாக்க மையக் கட்டட உரக்கிடங்கு கட்டும் பணியை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் அடிக்கல் நாட்டி தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய செயலாளா் இளையபெருமாள், ஊராட்சித் தலைவா் கண்மணி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் ஸ்ரீதா், வேளாண்மை உதவி இயக்குநா் சுப்பையா, உதவி பொறியாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT