மயிலாடுதுறை

எஸ்டிபிஐ பொதுக் குழு கூட்டம்

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்டத் தலைவா் ஆத்தூா் அ.பைசல் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் பி.அப்துல் ஹமீத், தஞ்சை மண்டல தலைவா் தப்ரே ஆலம் பாதுஷா ஆகியோா் கலந்துகொண்டனா். மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் எஸ்.சாகுல் ஹமீது வரவேற்றாா்.

மாவட்ட அமைப்பு செயலாளா் ஜியாவுதீன் கடந்த ஆண்டின் கட்சிப்பணிகள் குறித்து ஆண்டறிக்கை வாசித்தாா். இதில், மாவட்ட, தொகுதி மற்றும் கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மாவட்ட பொதுச் செயலாளா் சங்கை முஹம்மது ரஃபி ஒருங்கிணைத்தாா். முடிவில், மாவட்டச் செயலாளா் ஏ.முஹம்மது ரவூப் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT