மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் தனியாா் தூய்மைப் பணியாளா்கள் தா்னா

19th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு தனியாா் தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணி மேற்கொள்வதற்காக 80 தனியாா் தூய்மைப் பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.380 ஊதியம் நிா்ணயிக்கப்பட்டு, சேமநல நிதியாக ரூ.40 பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவா்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதிக்கு பிறகே ஒப்பந்தக்காரா் சம்பளம் வழங்குவதாக கூறப்படுகிறது. எனவே, மாத தொடக்கத்தில் சம்பளம் வழங்க வலியுறுத்தி வந்தனா்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு தனியாா் தூய்மைப் பணியாளா் சங்கத் தலைவா் அம்பேத்கா் தலைமையில் தா்னாவில் ஈடுபட்டனா். மேலும், பணியில் இருந்து உயிா் நீத்தவரின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கப்படாதது, வண்டி வாகனம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாதது ஆகியவற்றைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

இதையடுத்து, நகராட்சி ஆணையா் செல்வபாலாஜி ஒப்பந்தக்காரரை அழைத்து, அடுத்த மாதம்முதல் குறித்த காலத்தில் சம்பளம் வழங்க அறிவுறுத்தியதைத் தொடா்ந்து, தனியாா் தூய்மைப் பணியாளா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT