மயிலாடுதுறை

நவ.27-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

19th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டத்தில் நவம்பா் 27-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டு நவம்பா் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் 24.11.2022 அன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் அரசின் கரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து பங்கேற்று வேளாண்மை, நீா்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம், தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடா்புடைய கருத்துக்களை மட்டும் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT