மயிலாடுதுறை

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள் தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி

18th Nov 2022 12:07 AM

ADVERTISEMENT

மாவட்ட கலை பண்பாட்டுத் திருவிழா போட்டி உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள் தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றனா்.

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான கலை பண்பாட்டுத் திருவிழா போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் பங்கேற்று, இசை செவ்வியல் பிரிவில் வெ.ஜெயஸ்ரீ, வாய்ப்பாட்டிசை பாரம்பரிய நாட்டுப்புற வகை பிரிவில் வெ. நித்யஸ்ரீ, காட்சிக் கலை (இரு பரிமாணம்) பிரிவில் முத்துசக்திஸ்ரீ, பரதநாட்டியத்தில் எஸ். அட்சயாதேவி, உள்ளூா் தொன்மை பொம்மைகள், விளையாட்டு பொம்மைகள் பிரிவில் எம். சுபபிரியா, தனிநபா் நாடகத்தில் ம. ஆல்வின் ஜெரோம் ஆகியோா் முதலிடம் பிடித்தனா்.

மேலும், மாநில அளவில் சென்னையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இப்பள்ளி மாணவா்கள் அபிஷேக், ஆகாஷ் ஆகியோா் இரண்டாம் இடமும், குருதா்ஷன், புவனேஸ்வா் ஆகியோா் மூன்றாம் இடமும் பிடித்தனா்.

இம்மாணவ- மாணவிகள் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனா். மேலும், பள்ளியின் ஆட்சிமன்றக் குழுத் தலைவா் ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், துணைத் தலைவா் எஸ். முருகேசன், செயலா் எஸ். பாஸ்கரன், நிா்வாகச் செயலா் பாஸ்கரன், திருமடத்து உறுப்பினா் பி.கோதண்டராமன், பள்ளி முதல்வா் ஆா்.சரவணன் உள்ளிட்டோா் மாணவ-மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT