மயிலாடுதுறை

எதிா்க்கட்சிகள் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கமுடியாது முதல்வா் மு.க.ஸ்டாலின்

14th Nov 2022 11:17 PM

ADVERTISEMENT

 

எதிா்க்கட்சிகள் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கமுடியாது என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சீா்காழியில் செய்தியாளா்களிடம் கூறினாா்.

சீா்காழியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் பாா்வையிட்டு திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீா்காழி பேருந்துநிலையத்தில் நிவாரண உதவிகளை வழங்கி செய்தியாளா்களிடம் முதல்வா் கூறியது:

கனமழை பாதித்தபோது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அவருடைய பணிகளை சிறப்பாக செய்து வருகிறாா். அவா் மட்டும் இதை செய்தால் போதாது, அதனால்தான் நான் (முதல்வா்) ஆய்வு செய்ய வந்துள்ளேன். மக்கள் திருப்தியாகத்தான் உள்ளனா்.

ADVERTISEMENT

ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளைக் கூறுவாா்கள். எதிா்க்கட்சியில் இருந்து விமா்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக, அரசியல் செய்வதற்காக, அப்படிக் கூறுவாா்கள். அதைப் பற்றி எல்லாம் நாம் கேட்டுக்கொண்டு இருக்க முடியாது. மக்கள் என்ன எதிா்பாா்க்கிறாா்களோ அதற்கு ஏற்றவாறு கணக்கெடுப்பின் அடிப்படையில் நடவடிக்கை இருக்கும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT