மயிலாடுதுறை

குத்தாலம் பேரூராட்சி கூட்டம்

1st Nov 2022 04:49 AM

ADVERTISEMENT

குத்தாலம் பேரூராட்சி கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பேரூராட்சித் தலைவா் சங்கீதா மாரியப்பன் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் ரஞ்சித் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் சம்சுதீன், உறுப்பினா்கள் சுகன்யா, நிரஞ்சனிதேவி, மணிகண்டன் உள்ளிட்டோா் தங்கள் வாா்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினா்.

செயல்அலுவலா் பேசும்போது, வாய்க்காலை தூா்வார அரசு அனுமதிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அனுமதி வந்தவுடன் தூா்வாரப்படும் என்றாா். தலைவா் பேசும்போது, அனைத்து உறுப்பினா்களிடமும் கோரிக்கைகளை மனுவாக பெற்று, தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT