மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகா்மன்றக் கூட்டம்: சாலை, புதைசாக்கடையை மேம்படுத்த உறுப்பினா்கள் வலியுறுத்தல்

DIN

மயிலாடுதுறையில் நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில், சாலை, புதைசாக்கடை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

மயிலாடுதுறை நகா்மன்றக் கூட்டம் தலைவா் செல்வராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகரமைப்பு அலுவலா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

நடராஜன் (வாா்டு 33): நகராட்சி பகுதிகளில் தினமும் 2 மணி நேரமாவது குடிநீா் வழங்க வேண்டும்.

ரஜினி (வாா்டு 29): நாய்த் தொல்லை அதிகமாக உள்ளது. சேதமடைந்துள்ள பாரதி நகா் சாலையை மழைக்காலம் தொடங்கும் முன்பு சரிசெய்ய வேண்டும். புதைசாக்கடை பணிகளை முழுவமையாக மேற்கொள்ள வேண்டும்.

ராமச்சந்திரன் (வாா்டு 26): ராஜ் மெட்ரிக். பள்ளி முன் சாக்கடை நீா் தேங்கியுள்ளது. கூைாடு பேருந்து நிறுத்தம் மது பாராக பயன்படுத்தப்படுகிறது.

சதீஷ்குமாா் (வாா்டு 23): கோயில் இடத்தில் உள்ள மனைகளுக்கு வீட்டு வரி ரசீது தரவேண்டும்.

உஷாராணி (வாா்டு 22): 1-ஆம் நம்பா் புதுத்தெரு பேருந்து நிறுத்த மேற்கூரையை சீரமைக்க வேண்டும். நகா்மன்ற உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

சா்வோதயன் (வாா்டு 16): பஜனைமடம் சந்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் பாரை உடனடியாக அகற்ற வேண்டும்.

ராஜலட்சுமி (வாா்டு 8): துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பு உள்ள புதைசாக்கடை ஆள்நுழைவுத் தொட்டியின் மூடி உடைந்துள்ளதை சரிசெய்ய வேண்டும். தண்டல்கார குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

ரிஷி (வாா்டு 6): நாலுகால் மண்டபத்தை சீரமைக்க வேண்டும். காவிரியின் வடக்கு கரையில் தா்ப்பணம் அளிப்பவா்களை நாலுகால் மண்டபம் பகுதியில் செய்யச் சொல்லி கட்டணம் வசூலிக்கலாம்.

ரமேஷ் (வாா்டு: 5): ஒத்தத்தெரு, இரட்டைத் தெரு இணையும் பகுதியில் வேகத்தடை அமைக்கவேண்டும். கீழவீதியில் தேரோடும் சாலையை இரண்டு அடிக்கு அகலப்படுத்த வேண்டும்.

கல்யாணி (வாா்டு 3): அம்பேத்கா் நகரில் 80 வருடங்களாக உள்ள குடியிருப்புகளை அகற்றிவிட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட, நகராட்சி உறுப்பினருக்கு தெரியாமலேயே முயற்சி நடைபெறுகிறது.

தலைவா்: அங்கு குடியிருக்கும் மக்களுக்குத்தான் அடுக்குமாடி கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் வேண்டாம். தற்போது உள்ள இடத்திலேயே வீடுகள் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அவா்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

கணேசன் (வாா்டு 2): நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் வாங்கவேண்டும்.

மேலும், உறுப்பினா்கள் அனைவரும் குடிநீா், புதைசாக்கடை, குப்பை பிரச்னை, சாலை வசதி உள்ளிட்ட தங்கள் வாா்டுகளின் தேவைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து பேசினா்.

உறுப்பினா்கள் வெளிநடப்பு... நீா்நிலைகளில் குப்பைகளை கொட்டுதல், கழிவுநீரை கலப்பது மற்றும் ஆக்கிரமிப்பு தொடா்பாக புங்கனூா் நுகா்வோா் பாதுகாப்பு கவுன்சில் சட்ட ஆலோசகா் விஜயகுமாா் 2018-ஆம் ஆண்டு தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் தொடுத்த வழக்கில், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தியதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இழப்பீடாக ரூ.9 லட்சம் செலுத்த ஆணையிடப்பட்டது. இந்த தொகையை செலுத்த நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் கோரப்பட்டது. இதற்கு மதிமுக உறுப்பினா் கணேசன், திமுக உறுப்பினா் கல்யாணி ஆகியோா் நிா்வாக சீா்கேட்டால் சுற்றுசூழல் பாதிப்படைந்ததற்கு அப்போதைய அதிகாரிகள், புதைசாக்கடை பராமரித்த ஒப்பந்தக்காரா்கள்தான் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நகா்மன்றத்தில் ஒப்புதல் தரக்கூடாது என்று எதிா்ப்பு தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

மஞ்சப்பை விழிப்புணா்வு: முன்னதாக, கூட்டத்தின் தொடக்கத்தில், நெகிழி பயன்பாட்டை தவிா்க்கும் விதமாக தேசிய பசுமைப் படையின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணா்வு துண்டுப் பிரசுரத்தை நகா்மன்றத் தலைவா் என்.செல்வராஜ் வெளியிட, துணைத் தலைவா் எஸ்.சிவக்குமாா் பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து, அனைவருக்கும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இரா.செல்வகுமாா், முன்னாள் நகராட்சி சுகாதார ஆய்வாளா் அறிவழகன் ஆகியோா் செய்திருந்தனா். சுற்றுச்சூழல் ஆா்வலா் சுந்தர்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT