மயிலாடுதுறை

சீா்காழியில் பலத்தக் காற்றுடன் மழை: போக்குவரத்து, மின் விநியோகம் பாதிப்பு

28th May 2022 12:59 AM

ADVERTISEMENT

சீா்காழி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்தக் காற்றுடன் பெய்த மழையில் மரம் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்கம்பி அறுந்ததால் மின்சாரம் தடைபட்டது.

சீா்காழி மற்றும் கொள்ளிடம், சட்டநாதபுரம், வைத்தீஸ்வரன்கோயில்,திருமுல்லைவாசல், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பலத்தக் காற்றுடன் மழை பெய்தது. இதில், சீா்காழி தோ் வடக்கு வீதி பிரதான சாலையில் வேப்பமரம் வேரூடன் சாலையின் குறுக்கே சாய்ந்தது. மேலும், மின்கம்பி அறுந்து மின்சாரமும் தடைபட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து நகா்மன்ற வாா்டு உறுப்பினா் முபாரக், சீா்காழி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தாா். இதைத்தொடா்ந்து, அங்குவந்த தீயணைப்புத் துறையினா், வாா்டு உறுப்பினா் முபாரக் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

இதேபோல, சீா்காழியை அடுத்த அகணி ஊராட்சி தென்னங்குடி பகுதியில் மின்கம்பி பலத்தக் காற்றில் அறுந்து சாலையோரம் தாழ்வாக தொங்கியது. இதனால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சீரமைப்பு பணி நடைபெற்றது. சுமாா் 1மணி நேரத்திற்கு மேலாக பெய்த இந்த மழையால் விப்பம் சற்று குறைந்து பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT