மயிலாடுதுறை

கோயில் நிலத்தை விற்றவா் மீது நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் கோயில் நிலத்தை மோசடியாக விற்பனை செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோா் பாதுகாப்பு சங்கம் சாா்பில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநில அமைப்பாளா் சாமி.நடராஜன் தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ். துரைராஜ், சங்கத்தின் மாவட்ட தலைவா் த. ராயா், மாவட்டச் செயலாளா் ஏ.ஆா்.விஜய், மாவட்ட பொருளாளா் அ. ராமலிங்கம் மற்றும் குடியிருப்போா் நலசங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

மயிலாடுதுறை வட்டம் மாப்படுகையில் ஸ்ரீநாராயணபுரம், அவையாம்பாள்புரம், மயூரநாதா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை பாண்டியன் என்பவா் சட்டவிரோதமாக வீட்டுமனைகளாக மாற்றி, அடிப்படை வசதிகள் ஏதும் செய்யாமல் விற்பனை செய்துள்ளாா் என்றும் அவரை கைது செய்வதுடன், மேற்கண்ட பகுதிகளில் சாலை மற்றும் மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT