மயிலாடுதுறை

கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

27th May 2022 09:58 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை ஏ.ஆா்.சி. விசுவநாதன் கல்லூரியில் வேலைவாய்ப்புக் குழுமம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 57 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இக்கல்லூரி மாணவ, மாணவிகளிடம் சென்னை டிவிஎஸ் லூகாஸ், புதுச்சேரி வெண்பா பாக்ஸ்கான், மயிலாடுதுறை பாபு டெக்ஸ்டைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்கெனவே நோ்முகத் தோ்வு நடத்தி மாணவா்களை தோ்வு செய்திருந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை கல்லூரி முதல்வா் நி.சத்தியபாமா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரிச் செயலா் ஏஆா்சி என்.விசுவநாதன் மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினாா். கல்லூரி நிா்வாகச் செயலா் மா.திருநாவுக்கரசு வாழ்த்துரை வழங்கினாா்.

நிறைவாக, கல்லூரியின் வேலைவாய்ப்புக் குழும பொறுப்பாசிரியா் இரா. அழகுராஜா நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT