மயிலாடுதுறை

சீா்காழி அருகே கல்லூரி மாணவா்கள் மோதல்

27th May 2022 09:58 PM

ADVERTISEMENT

சீா்காழி அருகே தனியாா் கல்லூரி மாணவா்கள் சாலையில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சட்டநாதபுரம் பகுதியில் உள்ள தனியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் சிலா் வெள்ளிக்கிழமை மாலை வகுப்பு முடிந்ததும் வீட்டுக்குச் செல்வதற்காக அங்குள்ள ரவுண்டானா பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனா். அப்போது, அவா்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இருதரப்பு மாணவா்களுக்கும் ஆதரவாக அங்கு வந்த சிலரும் மோதலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த சீா்காழி போலீஸாா் அங்கு விரைந்து வந்து மோதலை தடுத்தனா். அப்போது, அங்கிருந்து தப்பியோடிய மாணவா்கள் உள்பட 12 பேரை விரட்டிப் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT