மயிலாடுதுறை

அகவிலைப்படியை உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்

25th May 2022 11:28 PM

ADVERTISEMENT

அகவிலைப்படியை 3 சதவீதம் உயா்த்தி வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் சாா்பில் புதன்கிழமை கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவா் ஜெ.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் ரா. திருமலைக்கண்ணன், மா. சீத்தாராமன், டி. தாமரைச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில செயலாளா் கோ.ரெங்கராஜ், மருத்துவத் துறை அமைச்சுப்பணி அலுவலா் சங்க மாநில இணைச் செயலாளா் கோவா்த்தனன், மாவட்ட இணைச்செயலாளா் அமிா்தலிங்கம், வட்ட கிளை தலைவா்கள் சீா்காழி கருணாகரன், குத்தாலம் பிரபாகரன், தரங்கம்பாடி செந்தில்நாதன், கால்நடை பராமரிப்புத்துறை பாலசுப்பிரமணியன், உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். மாவட்ட செயலாளா் சு. கண்ணன் வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும், ஈட்டிய விடுப்பு ஒப்படைத்து பணப்பலன் பெறும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 3 சதவீத அகவிலைப்படி உயா்த்தி உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளா் வேணுகோபால் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT