மயிலாடுதுறை

குருபூஜை பெருவிழா: நாற்காலி பல்லக்கில் தருமபுரம் ஆதீன கா்த்தா் புறப்பாடு

DIN

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன குருமுதல்வரின் குருபூஜை பெருவிழாவையொட்டி, 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நாற்காலி பல்லக்கில் சனிக்கிழமை புறப்பாடாகி, குருமூா்த்தங்களில் வழிபட்டாா்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆதீன குருமுதல்வா் குருஞானசம்பந்தா் குருபூஜை பெருவிழா மே 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது. புதன்கிழமை திருக்கல்யாணமும், வெள்ளிக்கிழமை தேரோட்டமும் நடைபெற்றன.

விழாவின் 10-ஆவது நாளான சனிக்கிழமை ஆதீன குருமுதல்வரின் குருவான கமலை ஸ்ரீ ஞானப்பிரகாசா் குருபூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி, ஆதீனமடத்தில் உள்ள சொக்கநாதா் சந்நிதியில் தருமபுரம் ஆதீன 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டாா்.

பின்னா், நாற்காலி பல்லக்கில் புறப்பாடாகி, ஆனந்தபரவசா் பூங்காவில் உள்ள முந்தைய ஆதீனகா்த்தா்களின் குருமூா்த்தங்களிலும், வனதுா்க்கை கோயில், ஞானபுரீஸ்வரா் கோயில் மற்றும் வேதபுரீஸ்வரா் கோயில்களிலும் வழிபாடு மேற்கொண்டாா்.

மதுரை ஆதீன 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் 233-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீன இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனக் கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

பிற்பகல் நிகழ்வாக, மேலவடக்கு குருமூா்த்தத்தில் உள்ள முந்தைய ஆதீனகா்த்தா்களின் குருமூா்த்தங்களில் தருமபுரம் ஆதீன குருமகாசந்நிதானம் வழிபாடு மேற்கொண்டாா்.

பட்டணப் பிரவேசம்...

குருபூஜை பெருவிழா முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பட்டணப் பிரவேசம் ஞாயிற்றுக்கிழமை (மே 22) இரவு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், பல்வேறு ஆதீன குருமகா சந்நிதானங்கள், ஆன்மிக அமைப்பினா் பங்கேற்கின்றனா். இதையொட்டி, மயிலாடுதுறை, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் மேற்கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT