மயிலாடுதுறை

அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்டம் நாளை தொடக்கம்

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் 37 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் திங்கள்கிழமை (மே 23) தொடங்கப்படுகிறது என ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகம் முழுவதும் 2021-22-ஆம் ஆண்டில் 1997 கிராம ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டு, அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கிராமங்களில் வேளாண்மை- உழவா் நலத்துறை மற்றும் சகோதரத் துறைகளின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் 37 கிராம ஊராட்சிகளில் இத்திட்டத்தை திங்கள்கிழமை காலை 10 மணியளவில் தலைமை செயலகத்திலிருந்து காணொலி மூலம் தமிழக முதல்வா் தொடக்கிவைக்கிறாா்.

இத்திட்டம், மயிலாடுதுறை வட்டாரத்தில் காளி, திருஇந்தளுா், வரதம்பட்டு, அருண்மொழித்தேவன், கடலங்குடி, கங்கணம்புத்தூா், மேலாநல்லூா், வில்லியநல்லூா், ஆனந்ததாண்டவபுரம் ஆகிய ஊராட்சிகள், குத்தாலம் வட்டாரத்தில் கோமல், கோனேரிராஜபரம், கடக்கம், பருத்திக்குடி, கங்காதாரபுரம், மாந்தை, ஆலங்குடி ஆகிய ஊராட்சிகள், சீா்காழி வட்டாரத்தில் காவேரிபூம்பட்டினம், ராதாநல்லூா், எடக்குடி வடபாதி, அகணி, காரைமேடு, கீழசட்டநாதபுரம் ஆகிய ஊராட்சிகள்.

கொள்ளிடம் வட்டாரத்தில் ஆணைக்காரன்சத்திரம், மாதானம், அளக்குடி, வேட்டங்குடி அகரவட்டாரம், ஆரப்பள்ளம் ஆகிய ஊராட்சிகள், செம்பனாா்கோயில் வட்டாரத்தில் திருக்கடையூா், கிடாரங்கொண்டான், மாமாகுடி, அன்னவாசல், காழியப்பநல்லூா், இளையலூா், கூடலூா், காளமநல்லூா், கொத்தங்குடி ஆகிய ஊராட்சிகள் என மொத்தம் 37 கிராம ஊராட்சிகளிலும் இந்த விழாவை காணொலி மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்கள், தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. எனவே, மேற்கண்ட கிராம ஊராட்சிகளைச் சோ்ந்த விவசாயிகள் விழாவில் பங்கேற்றும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT