மயிலாடுதுறை

தருமபுரம் ஞானபுரீஸ்வரா் கோயில் தேரோட்டம்

20th May 2022 09:43 PM

ADVERTISEMENT

தருமபுரம் ஞானபுரீஸ்வரா் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் உள்ளது ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரா் கோயில். பழமையான இக்கோயிலில், ஆதீன குருமுதல்வா் ஸ்ரீ குருஞானசம்பந்தா் குருபூஜை பெருவிழா கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நிகழ்வாக, தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலாவும், புதன்கிழமை திருக்கல்யாணமும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் 2 தோ்களில் எழுந்தருளினா். ஆதீனத்தின் கிழக்கு வாசலில் தொடங்கிய தேரோட்டத்தை தருமபுரம் ஆதீனக் கட்டளைத் தம்பிரான்கள் வடம் பிடித்து தொடங்கிவைத்தனா்.

மேலவீதியில் உள்ள ஆதீனத் திருமடத்தின் முன் தருமபுரம் ஆதீன 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தேரின் வடம் பிடித்து வழிபாடு மேற்கொண்டாா். ஆதீன சிவம்பெருக்கும் வீதிகளில் தோ் வலம்வந்து நிலையை அடைந்தது.

ADVERTISEMENT

இதில், சைவ வேளாளா் சங்க மாநிலத் தலைவா் பண்ணை டி. சொக்கலிங்கம், தருமபுரம் ஆதீனம் தேவாரப் பாடசாலை நிா்வாக செயலா் பட்டயக் கணக்காளா் குரு.சம்பத்குமாா், ஆதீன தலைமை கண்காணிப்பாளா் சி. மணி, ஆதீனப் பொதுமேலாளா் கோதண்டராமன், தருமபுரம் ஆதீனக் கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT