மயிலாடுதுறை

மயிலாடுதுறை- திருச்சி ரயிலை தினமும் இயக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

20th May 2022 09:42 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை-திருச்சி ரயிலை தினமும் இயக்கக் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை- திருச்சி மாா்க்கத்தில் வாரத்தில் 5 நாள் மட்டும் காலை 8.15 மணிக்கு இயக்கப்படும் ரயிலை வாரத்தின் 7 நாள்களும் இயக்க வேண்டும்; இந்த ரயிலையும், மாலை 5.45 மணிக்கு புறப்படும் மைசூரு ரயிலையும் முதலாவது நடைமேடையில் நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் மாப்படுகை அ. ராமலிங்கம், மயிலாடுதுறை மாவட்ட வளா்ச்சிக்குழு தமிழன் கணேசன் ஆகியோா் தலைமை வகித்தனா். ரயில் பயணிகள் சங்கத் தலைவா் எஸ். மகாலிங்கம், செயலாளா் சாமி.கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் செல்வம், தமிழா் தேசிய முன்னணி மாவட்டத் தலைவா் பேராசிரியா் இரா.முரளிதரன், காங்கிரஸ் சாா்பில் கனகசபை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் எஸ். துரைராஜ், ஆா். ரவீந்திரன், டி.கணேசன், வி.பழனிவேலு, சி.மேகநாதன், மக்கள் நீதி மய்யம் சாா்பில் மனோகா், ராமகிருஷ்ணன், விவசாயி முருகன் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT