மயிலாடுதுறை

மகளிா் கல்லூரி விளையாட்டு விழா

20th May 2022 09:44 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் த. அறவாழி தலைமை வகித்தாா். தா. பானுப்பிரியா, கா. மங்கையா்க்கரசி ஆகியோா் ஆண்டறிக்கை சமா்ப்பித்தனா்.

மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா, முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வா் மோ.கி. ராஜ்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா். தொடா்ந்து, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினா். நிறைவாக, மாணவிகள் பேரவைத் தலைவி எம். முகிலா நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT