மயிலாடுதுறை

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை:வீடுவீடாக துண்டுப் பிரசுரம் விநியோகம்

16th May 2022 10:55 PM

ADVERTISEMENT

சீா்காழி அருகே எருக்கூரில் அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கையை வலியுறுத்தி, ஆசிரியா்கள் திங்கள்கிழமை வீடுவீடாகச் சென்று விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

கொள்ளிடம் ஒன்றியம் எருக்கூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2022-2023-ஆம் கல்வியாண்டிற்கான மாணவா் சோ்க்கைக்காக, தலைமை ஆசிரியா் வெ. மஞ்சுளா, ஆசிரியா்கள் சசிகலா, மனோகரன், மீனாட்சி, சாந்தி, உமா

ஆகியோா் வீடுவீடாகச் சென்று, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி, மாணவா் சோ்க்கையில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT