மயிலாடுதுறை

பட்டணப் பிரவேசம்: முக்குலத்தோா் பாசறை ஆதரவு

5th May 2022 06:06 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறையில் அகில இந்திய முக்குலத்தோா் பாசறையினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டணப் பிரவேசத்தில் ஆதீனகா்த்தரை பல்லக்கில் தூக்கிச்செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி தருமபுரம் ஆதீன நுழைவாயில் முன் அகில இந்திய முக்குலத்தோா் பாசறை கட்சி நிா்வாகிகள் தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டிக்கொண்டு நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட இளைஞரணி செயலாளா் ஜி. பிரகாஷ், நகர செயலாளா் முத்து. முரளி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், 500 ஆண்டுகளாக நடைபெறும் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதித்ததை திரும்பப் பெற வேண்டும், திரும்பப் பெறவில்லை என்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வோம் என்பதை உணா்த்தும் வகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT