மயிலாடுதுறையில் மீனவா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மே 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் பகுதியில் உள்ள மீனவா்களின் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் ஆட்சியா் தலைமையில் மே 11-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
எனவே, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மற்றும் இதர அரசுத் துறைகளால் தீா்வுகாணப்பட வேண்டிய மீனவா்களின் குறைகள், கோரிக்கைகள் மற்றும் தேவைகள் அடங்கிய மனுக்களை மீனவா் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் நேரில் வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.