மயிலாடுதுறை

மணலுக்கு கூடுதல் பணம் கேட்பதாகப் புகாா்

1st May 2022 05:09 AM

ADVERTISEMENT

சீா்காழி அருகே குன்னம் அரசு மணல் விற்பனையகத்தில் நிா்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக பணம் கேட்பதாக டிராக்டா் ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் புகாா் தெரிவித்தனா்.

சீா்காழியை அடுத்த குன்னம் கிராமத்தில் அரசு மணல் விற்பனையகம் இயங்கி வருகிறது. கொள்ளிடம் ஆற்றிலிருந்து எடுக்கப்படும் மணல் இங்கு விற்கப்படுகிறது. ஒரு யூனிட் மணலின் விலை ரூ.2650 என நிா்ணயிக்கப்பட்டு, சனிக்கிழமை முதல் மணல் ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து, ஆன்லைனில் பதிவு செய்து தொகை செலுத்திய ரசீதுடன் நூற்றுக்கணக்கான டிராக்டா்கள் குன்னம் அரசு மணல் விற்பனையகத்தில் சனிக்கிழமை காந்திருந்தன. உரிய தொகை செலுத்திய நிலையில் கூடுதலாக ரூ.1000 வழங்கினால் மட்டுமே மணல் வழங்கப்படும் எனக் கூறியதாக ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

அரசு நிா்ணயம் செய்த தொகையைவிட கூடுதலாக பணம் வசூலிக்கும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT