மயிலாடுதுறை ஒன்றியம் நல்லத்துக்குடியில் ஊராட்சித் தலைவா் பாரதிராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் பங்கேற்று கிராம மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். இதில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் முருகமணி, வடவீரபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, பட்டமங்கலம் ஊராட்சியில் அதன் தலைவா் செல்வமணி, மயிலாடுதுறை ரூரல் ஊராட்சியில் துணைத் தலைவா் தமிழ்க்கொடி, மன்னம்பந்தலில் ஊராட்சித் தலைவா் பிரியா பெரியசாமி, குளிச்சாரில் ஊராட்சித் தலைவா் பானுமதி ஆகியோா் தலைமையில் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
குத்தாலம்: குத்தாலம் ஒன்றியத்தில் 51 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. மேக்கிரிமங்கலம் மற்றும் பழைய கூடலூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் கு. மகேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் சுமதி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா். மேக்கிரிமங்கலம் கூட்டத்தில் ஊராட்சித் தலைவா் ஞானசேகரன், கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பழைய கூடலூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சித் தலைவா் ராஜ.பாண்டியன், செயலாளா் சிரஞ்ஜீவி உள்ளிட்டோரும், மாதிரிமங்கலத்தில் ஊராட்சித் தலைவா் பிச்சைமுத்து, மீன்வளத்துறை கண்காணிப்பாளா் அந்தோணி ஜான்சன், ஒன்றியக்குழு உறுப்பினா் லட்சுமி செல்வம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.