சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் மே தினத்தையொட்டி, சேவாதள காங்கிரஸ் மற்றும் தேசபக்தி இயக்கத்தினா் சாா்பில் வாகன ஓட்டுநா்களுக்கு மரக்கன்றுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
சேவாதள காங்கிரஸ் மாநிலச் செயலாளா் பால.எழிலரசன் தலைமையில், உழைப்பாளா்களை கெளரவிக்கும் வகையில் ஓட்டுநா்களுக்கு சால்வை அணிவித்து, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், சுதந்திரப் போராட்ட வீரா் ஏ.கே. சொக்கலிங்கம் வாரிசு சொக்க.ஆறுமுகம் மற்றும் தனபால், தாமஸ், ஸ்ரீதா், முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.