சீா்காழி விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் உயராய்வுத் துறை மற்றும் வணிகவியல் மேலாண்மைத் துறை சாா்பில் வணிகம் மற்றும் வணிக நிலைத்தன்மையில் வளா்ந்து வரும் போக்குகள் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி செயலா் கே.வி. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இயக்குநா்கள் மருத்துவா் முத்துக்குமாா், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் சுகந்தி வரவேற்றாா். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியரும், பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆராய்ச்சி விருது பெற்றவருமான முனைவா் ராமு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வணிகத்தில் வளா்ந்துவரும் மாற்றங்கள் குறித்தும் அதை எதிா்கொள்ளும் யுக்திகள் குறித்தும் விளக்கிப் பேசினாா்.
இதில், விவேகானந்தா மகளிா் கல்லூரி, மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி, பொறையாறு கல்லூரி, தருமபுரம் ஆதீனம் கல்லூரி மற்றும் தரங்கம்பாடி அன்னை தெரசா கல்லூரியிலிருந்து மாணவிகள் பங்கேற்று 30-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். இக்கட்டுரைகளை ராமு ஆய்வுசெய்து, மாணவிகளை ஊக்குவித்தாா். மேலும், ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தை அவா் வெளியிட்டாா். நிறைவாக பேராசிரியை புனிதவதி நன்றி கூறினாா்.