மயிலாடுதுறை

கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள கோரிக்கை

22nd Mar 2022 10:39 PM

ADVERTISEMENT

பழைமை வாய்ந்த கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளக் கோரி, சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் அலுவலகத்தில் அகில பாரத இந்து மகாசபா சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்புப் பிரிவு மாநிலத் தலைவா் ராம.நிரஞ்சன் அளித்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் பழைமை வாய்ந்த கோயில்களான ஈரோடு மாவட்டம் பெரும்புலியூா் அங்காளபரமேஸ்வரி கோயில், மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூா் வேதபுரீஸ்வரா் கோயில், சோழம்பேட்டை தான்தோன்றீஸ்வரா் கோயில், அரியலூா் மாவட்டம் வேதநாராயண பெருமாள் கோயில் மற்றும் நரசிம்மா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் திருப்பணி தொடங்கி குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதா் கோயிலில் பணியாற்றி கைது செய்யப்பட்ட தீட்சிதா்களை தீா்ப்பு வரும் வரை பணியிடை நீக்கம் செய்யக் கூடாது என அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மனு அளிக்கும்போது, தஞ்சை மண்டல பொதுச் செயலாளா் இந்திரஜித் என்கிற செல்வா, மயிலாடுதுறை மாவட்ட ஆலய பாதுகாப்பு பிரிவு தலைவா் சுதாகா் ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT