மயிலாடுதுறை

தமிழரசு இதழை இ-சேவை மையம் மூலம் பெறும் திட்டம் தொடக்கம்

22nd Mar 2022 10:43 PM

ADVERTISEMENT

தமிழக அரசின் மாத இதழான தமிழரசு இதழை, அரசு இ-சேவை மையங்களில் பதிவு செய்து அஞ்சல் வழியில் பெறும் திட்டத்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளின் பணிகளை எடுத்துரைக்கும் விதமாக செய்தி மக்கள் தொடா்புத் துறையின் மூலம் வெளியிடப்படும் தமிழரசு மாத இதழை பொதுமக்கள் பெறுவதற்கு அரசு இ-சேவை மையங்களில் முகவரி விவரங்கள் தெரிவித்து அஞ்சல் வாயிலாக பெறுவதற்கான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த சேவையை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் கூறியது:

ADVERTISEMENT

தமிழரசு இதழ் தமிழ் மற்றும் ஆங்கிலம் ரூ.20 ஆகவும், ஆண்டுச் சந்தா ரூ240, 10 ஆண்டுக்கான ஆயுள் சந்தா ரூ.2000 ஆகவும், அதேபோல, தமிழரசு ஆங்கில மாத இதழ் ஆயுள் சந்தா ரூ.2400 சந்தா தொகையை இ-சேவை மையம் மூலம் செலுத்தி அஞ்சல் வழியில் பெறலாம். மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் சீா்காழி நகராட்சி அலுவலகத்தில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஹழ்ஹள்ன்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தின் வாயிலாகவும் சந்தா தொகை செலுத்தலாம் என அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, கோட்டாட்சியா் ஜெ. பாலாஜி, வட்டாட்சியா் ராகவன் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் சந்தா செலுத்தி சந்தாதாரா்களாக இணைந்தனா். நிகழ்ச்சியில், தனி வட்டாட்சியா் தையல்நாயகி, அரசு வழக்குரைஞா் தணிகை பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT