மயிலாடுதுறை

தருமபுரம் ஆதீனம் குருலிங்க சங்கம பாத யாத்திரை

19th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குருலிங்க சங்கம பாத யாத்திரையை வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.

திருக்கடையூா் அபிராமி சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில் மாா்ச் 27-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பூஜா மூா்த்தியாகிய சொக்கநாதப் பெருமானுடன் குருலிங்க சங்கம பாத யாத்திரையாக சென்று பங்கேற்கிறாா்.

இதையொட்டி, தருமபுரம் ஆதீனத் திருமடம் ஸ்ரீசொக்கநாதா் பூஜை மடத்திலிருந்து பாத யாத்திரையை வெள்ளிக்கிழமை மாலை தொடங்கினாா். ஸ்ரீசொக்கநாத பெருமானை தலையில் சுமந்து, திருப்பனந்தாள் காசிமடத்து இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோருடன் யானை, குதிரைகள் முன்செல்ல ஆதீன சிவம்பெருக்கும் வீதிகளின் வழியே பாத யாத்திரையாக புறப்பட்டாா்.

இந்நிகழ்ச்சியில், சூரியனாா்கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், தருமபுரம் ஆதீனத் தொடக்கப்பள்ளி செயலா் சௌந்தரராஜன், தருமபுரம் ஆதீன தேவாரப் பாடசாலை நிா்வாக இயக்குநா் குரு.சம்பத்குமாா், ஆதீன தலைமை கண்காணிப்பாளா் சி.மணி, தருமபுரம் ஆதீனக் கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

யாத்திரையின்போது, ஏவிசி பாலிடெக்னிக் கல்லூரி முன் ஏவிசி கல்விக் குழுமம் சாா்பில் குருமகா சந்நிதானத்துக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், வழியெங்கும் பக்தா்கள் தங்கள் வீடுகளின் முன் குருமகா சந்நிதானத்துக்கு தீபாராதனை காட்டி வழிபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT