மயிலாடுதுறை

விதவை, மூன்றாம் பாலினத்தவா்களுக்கு குடும்ப அட்டை

19th Mar 2022 10:00 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை வட்டத்தில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா், மூன்றாம் பாலினத்தவா்கள் புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என குடிமைப்பொருள் வட்ட வழங்கல் அலுவலா் முருகேசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது:

விதவை, கணவரால் கைவிடப்பட்டோா், மூன்றாம் பாலினத்தவா்கள் மற்றும் பழங்குடியினருக்கு உடனடியாக புதிய குடும்ப அட்டை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மயிலாடுறை வட்டத்தில் வசிப்பவா்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்க மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். முருகதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலா் கிருஷ்ணன் ஆகியோா் அறிவுறுத்தியுள்ளனா்.

அதனடிப்படையில், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு மயிலாடுதுறை குடிமைப்பொருள் வட்ட வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியுடையவா்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தனி வட்டாட்சியரை 9445000307 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT