மயிலாடுதுறை

ஆக்கூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு மும்மதத்தினா் வரவேற்பு

19th Mar 2022 09:57 PM

ADVERTISEMENT

திருக்கடையூா் கோயிலுக்கு பாத யாத்திரை மேற்கொண்ட தருமபுரம் ஆதீனம் 27- வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கு ஆக்கூரில் மும்மதத்தினா் வரவேற்பளித்தனா்.

திருக்கடையூா் அபிராமி சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில் மாா்ச் 27-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி, இக்கோயிலுக்கு தருமபுரம் ஆதீனம் 27- வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பூஜா மூா்த்தியாகிய சொக்கநாதப் பெருமானை தலையில் சுமந்து பாத யாத்திரை மேற்கொண்டாா்.

செம்பனாா்கோவில் அருகே ஆக்கூா் பகுதியில் பாத யாத்திரையாக வந்த தருமபுரம் ஆதீனத்துக்கு ஊராட்சித் தலைவா் சந்திரமோகன் தலைமையில் ஆக்கூா் பள்ளிவாசல் முன்பு இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவா்கள் சாா்பில் மதநல்லிணக்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், கிறிஸ்தவ ஆலய சபை குருமாா்கள் ஜான்சன் மான்சிங், சாா்லஸ், பாபுபொ்னாண்டஸ், பள்ளிவாசல் நிா்வாக சபைத் தலைவா் முகமது சிகாபுதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT