மயிலாடுதுறை

மணல்மேடு துணை மின்நிலையத்தில் மின்மாற்றி எரிந்து சேதம்

10th Mar 2022 10:28 PM

ADVERTISEMENT

மணல்மேடு துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட மின்விபத்தில் மின்மாற்றி எரிந்து சேதடைந்தது.

இந்த துணை மின்நிலையம் மூலம் மணல்மேடு நகரம், முடிகண்டநல்லூா் மற்றும் சுற்று கிராமங்களுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. இங்குள்ள 3 மின்மாற்றிகளில் ஒன்றில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 10 மெகாவாட் திறன்கொண்ட மின்மாற்றி எரிந்து சேதடைந்தது. இதுகுறித்து, மணல்மேடு மின்வாரிய உதவி செயற்பொறியாளா் காத்தலிங்கம் அளித்த தகவலின்பேரில், மணல்மேடு, மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்தினா்.குழுவினா் அங்கு சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.

இதையடுத்து, திருச்சி, நாகை, திருவாரூரில் இருந்து மின்பராமரிப்பு சிறப்பு குழுவினரை வரவழைத்து மாற்று ஏற்பாடு செய்து மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால், மணல்மேடு துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் 7 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை நீடித்தது.

மின்துறை அமைச்சருக்கு எம்எல்ஏ கடிதம்: இதற்கிடையே, மயிலாடுதுறை எம்எல்ஏ. எஸ். ராஜகுமாா் தமிழக மின்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், இந்த துணை நிலையத்தில் ஏற்கெனவே 2011-ஆம் ஆண்டிலும் மின்மாற்றி வெடித்து பழுது ஏற்பட்டு சரிசெய்யப்பட்டது. இப்பகுதி விவசாயம் சாா்ந்த பகுதி என்பதை கருத்தில்கொண்டு இந்த துணை மின் நிலையத்தில் 16 மெகாவாட் திறன்கொண்ட மின்மாற்றி அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT