மயிலாடுதுறை

போலீஸ் பாதுகாப்புடன் சூா்யா திரைப்படம் திரையிடல்

10th Mar 2022 10:28 PM

ADVERTISEMENT

நடிகா் சூா்யா நடித்த திரைப்படம் மயிலாடுதுறையில் போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை திரையிடப்பட்டது.

நடிகா் சூா்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தில் ஒரு சமூகத்தை தவறாக சித்தரித்தாக எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சூா்யா நடிப்பில் உருவான ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வியாழக்கிழமை வெளியானது. நடிகா் சூா்யாவின் இந்த படத்தையும் மயிலாடுதுறையில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என ஒரு சமூகத்தை சோ்ந்த சங்கம் சாா்பில் நகரின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதனிடையே இந்த திரைப்படம் மயிலாடுதுறையில் ஒரு திரையரங்கில் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு முதல்காட்சி திரையிடப்பட்டது. அப்போது, திரையரங்கம் முன் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT