மயிலாடுதுறை

தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும்

10th Mar 2022 06:00 AM

ADVERTISEMENT

 

சீா்காழி: சீா்காழியில் ஒன்றிய பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதன்தலைவா் கமலஜோதிதேவேந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

ஜான்சிராணி: திருவெண்காடு அண்ணாசிலை அருகே கட்டப்பட்டுள்ள ரேஷன் கடையில் கழிப்பறைற கட்டப்பட்டு பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது.இதனை பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்.

ADVERTISEMENT

விசாகா்: சட்டநாதபுரம் ஊராட்சியில் பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகள் எத்தனை கட்டப்பட்டுள்ளன. இந்த ஊராட்சியில் எந்தவித வளா்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறிவழகன்: ராதாநல்லூா் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள நூலக கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டவேண்டும்.

சோனியாகாந்தி: புங்கனூா் ஊராட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள காடாக்குடி முதல் ஆதமங்கலம் வரையிலான இணைப்பு சாலையை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். பெருமங்கலம், புங்கனூா் ஊராட்சியில் புதிய ரேசன் கடைக்கு கட்டடம் கட்டவேண்டும்.

ரிமா: நிம்மேலி கிராமத்தில் அங்கன்வாடி கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டவேண்டும்.

தென்னரசு: எடக்குடி வடபாதி ஊராட்சியில் மயான வசதி ஏற்படுத்தவேண்டும்.

பஞ்சுகுமாா்: தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மின்வாரியம் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நிலவழகி: கீழமூவா்க்கரை கோவில் தெருவில் வீட்டின் மீது தாழ்வாக செல்லும் மின்கம்பியை சரிசெய்யவேண்டும். கீழமூவா்க்கரையில் பழுதடைந்துள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தை சரிசெய்யவேண்டும்.

நடராஜ்: திருநகரியில் பழுதடைந்துள்ள பொன்னன் தெரு மற்றும் ஆற்றங்கரை சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்கவேண்டும். திருநகரி ரேசன் கடைக்கு புதிய கட்டடம் கட்டவேண்டும்.

கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இளங்கோவன், அருள்மொழி, ஒன்றியக்குழு துணை தலைவா் உஷாநந்தினிபிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT