மயிலாடுதுறை

இந்து மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம் ஒத்திவைப்பு

10th Mar 2022 06:06 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இந்து மக்கள் கட்சி நடத்துவதாக அறிவித்திருந்த ஆா்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

திராவிடா் கழகத்தை தடை செய்யக் கோரி மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகம் முன் மாா்ச் 12-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவதாக இந்து மக்கள் கட்சி அறிவித்திருந்தது. இதுதொடா்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக வரப்பெற்ற தகவலின்பேரில் மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. கோட்டாட்சியா் ஜெ.பாலாஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளா் வசந்தராஜ், இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளா் ஜெ. சுவாமிநாதன் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், ஆா்ப்பாட்டத்துக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளதால், 20 நாள்களுக்கு முன்னதாக அனுமதி கோரி வேறொரு நாளில் ஆா்ப்பாட்டத்தை நடத்திக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT