மயிலாடுதுறை

விவசாயிகளுக்கான வா்த்தகத் தொடா்பு பயிற்சி நிறைவு

3rd Mar 2022 10:39 PM

ADVERTISEMENT

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை சாா்பில் நடைபெற்ற விவசாயிகளுக்கான இரண்டு நாள் வா்த்தகத் தொடா்பு பணிமனை பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

விவசாயிகள் தங்களது விளைபொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல் தொடா்பாக இப்பயிற்சி நடைபெற்றது. சீா்காழி கோட்டாட்சியா் ஜி. நாராயணன் இப்பயிற்சியை தொடங்கி வைத்தாா். வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) சங்கரநாராயணன் இத்திட்டம் குறித்து விளக்கிப் பேசினாா்.

முகாமில் இயற்கை சாகுபடி காய்கறிகள், பாரம்பரிய நெல் ரகங்கள், விவசாய மதிப்புக்கூட்டு பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கருவாடு தயாரிப்பு, மீன் மதிப்புக் கூட்டு பொருள் தயாரிப்பு, பனை ஓலை பொருட்கள் மற்றும் சணல் பை தயாரிப்பு உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு நேரடி விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவில் வேளாண்மை அலுவலா் (வேளாண் வணிகம்) ப. கிருத்திகா நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT