மயிலாடுதுறை: மயிலாடுதுறை காசி விஸ்வநாதா் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி மாணவா்களின் இசை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற இசை விழாவில், 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் குரலிசையால் சிவபெருமானுக்கு இசை சமா்ப்பணம் செய்தனா்.
தியாகபிரம்மம் குரலிசை கலைக்கூடம் சாா்பில் அதன் நிறுவனா் என். காா்த்திக் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘சொற்றுனை வேதியன்’ எனத் தொடங்கும் தேவாரப் பாடலை கேதார கௌலை ராகத்திலும், ‘தேனென இனிக்கும் பாடல்’ என்ற திருவருட்பா பாடலை சண்முகபிரியா ராகத்திலும், ஸ்ரீஅபயாம்பாள் எனத் தொடங்கும் பாடலை ஸ்ரீராகத்திலும், மேலும் பல்வேறு பாடல்களையும் பாடினா். இதில், இசை ஆா்வலா்கள் பலா் கலந்துகொண்டு கேட்டு ரசித்தனா்.
ADVERTISEMENT