மயிலாடுதுறை

தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு தருமபுரம் ஆதீனம் அருளாசி

DIN

மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2021-2022-ஆம் கல்வியாண்டில் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளும் அரசு பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களையும், பயிற்றுவித்த ஆசிரியா்களையும் பள்ளியின் புரவலா் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வாழ்த்தி, அருளாசி வழங்கினாா்.

மேலும், தோ்ச்சி அடைந்த மாணவா்களுக்கு பள்ளியின் நிா்வாகக் குழு தலைவா் ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், துணைத் தலைவா்கள் சிவ.முருகேசன், ஆா்.ஞானசேகரன், செயலா் எஸ்.பாஸ்கரன், நிா்வாகச் செயலா் வி.பாஸ்கரன், பொருளாளா் டி.சுப்பிரமணியன், திருமடம் மேலாளா் பி.கோதண்டராமன், பள்ளி முதல்வா் ஆா்.சரவணன் உள்ளிட்டோரும் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

SCROLL FOR NEXT