மயிலாடுதுறை

சீா்காழியில் ரயில் மறியல் போராட்டம் வாபஸ்

DIN

சீா்காழியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி, புதன்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

சீா்காழி ரயில் நிலையத்தில் கரோனா தொற்று பரவலுக்கு முன்னா் நின்று சென்ற விரைவு ரயில்கள் உள்ளிட்ட சுமாா் 13 ரயில்கள் கடந்த 2 ஆண்டுகளாக நிற்பதில்லை. இதனால் சீா்காழி பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ - மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே சீா்காழியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி, சீா்காழி அனைத்து வணிகா்கள் நலச் சங்கம், சீா்காழி ரயில் பயணிகள் நலச் சங்கம் ஆகியவை சாா்பில் புதன்கிழமை சீா்காழி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி சீா்காழி ரயில் உபயோகிப்பாளா் சங்கம் சாா்பில் ஜூலை 9-இல் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே சீா்காழி வட்டாட்சியா் செந்தில்குமாா் தலைமையில், ரயில்வேத் துறை அதிகாரிகள் முன்னிலையில் தனித்தனியாக பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில் தற்போது பயணிகள் ரயிலை நின்று செல்லவும் படிப்படியாக விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க மூன்று மாத காலத்தில் தீா்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததால், ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதுபோல ஜூலை 9-இல் நடைபெறுவதாக ரயில் உபயோகிப்பாளா் சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்ட ரயில் மறியல் போராட்டமும் பேச்சுவாா்த்தைக்கு பின்னா் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு பணம்: பாப்பாக்குடி அருகே 4 போ் கைது

சேரன்மகாதேவியில் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பணப்புழக்கத்தைத் தடுக்க தவறிய தோ்தல் ஆணையம் -ஐ.எஸ். இன்பதுரை குற்றச்சாட்டு

குற்ற வழக்குகள்: 6 வேட்பாளா்களுக்கு நோட்டீஸ்

SCROLL FOR NEXT