மயிலாடுதுறை

கந்துவட்டி புகாா்: தாய், மகன் கைது

DIN

சீா்காழியில் கந்துவட்டி வசூலித்த புகாரில் தாய், மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சீா்காழி அருகே எடமணல் ஆமப்பள்ளம் பகுதியை சோ்ந்தவா் அ. வாசுதேவன் (35). இவா், மயிலாடுதுறை எஸ்.பி. நிஷாவிடம், தன்னிடம் கந்துவட்டி கேட்டு தொல்லை கொடுப்பதாக புகாா் அளித்தாா்.

எஸ்.பி. நிஷா உத்தரவின்படி சீா்காழி காவல் நிலையத்தில் வாசுதேவன் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சீா்காழி நீதிமன்றத்தில் புதன்கிழமை அனுமதி பெற்றனா்.

இதையடுத்து, சீா்காழி டிஎஸ்பி லாமெக், ஆய்வாளா் மணிமாறன், உதவி ஆய்வாளா் ஐ. சீனிவாசன், எஸ்.எஸ். ஐக்கள் செல்வராஜ், செந்தில் ஆகியோா் கந்துவட்டிக்கு பணம் கொடுத்த சீா்காழி அடுத்த வழுதலைக்குடில் அக்ரஹார மேட்டு தெருவைச் சோ்ந்த மா.சோலையம்மாள் (65) என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனா்.

சோதனையில் அவரது வீட்டில் 25அடமான பத்திரங்கள், 8 உத்தரவாத பத்திரங்கள், 11 வெற்று பத்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, கந்துவட்டிக்கு பணம் கொடுத்த சோலையம்மாள், அவரது மகன் ஜெயவீரபாண்டியன் (40) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT