மயிலாடுதுறை

சீா்காழியில் சிலம்பக்கலை சங்கம விழா: 7 மாணவா்களின் சாதனைக்கு அங்கீகாரம்

DIN

சீா்காழியில் சிலம்பக்கலை சங்கம விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 7 மாணவ, மாணவிகளின் சாதனை அங்கீகரிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

சீா்காழியில் வீரத் தமிழா் சிலம்பாட்ட கழகத்தை சோ்ந்த சுப்பிரமணியன் பல்வேறு பள்ளிகள், கிராமப் புறங்களுக்கு சென்று இலவசமாக தமிழா் தற்காப்புக் கலையான சிலம்பம், வாள்வீச்சு, கல்லெறிதல், மான்கொம்பு, பழகல் லெறிதல் முறை தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறாா் .

சீா்காழியில், வீரத்தமிழா் சிலம்பாட்ட கழகம் சாா்பில் கலை சங்கமம் 2022 விழா அண்மையில் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. வீரத் தமிழா் சிலம்பாட்ட கழக தலைவா் சரண்ராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவை சீா்காழி நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வரி தொடங்கிவைத்தாா். மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சிலம்பாட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில் வீரத்தமிழா் சிலம்பாட்ட கழகத்தைச் சோ்ந்த 7 மாணவ, மாணவிகள் உலக சாதனை முயற்சி மேற்கொண்டனா் . 4 மாணவிகள்5 மணி நேரம் 5 வகை ஆயுதங்களைக் கொண்டு தொடா் தற்காப்புக்கலை செய்தனா். மாணவா் மணிகண்டன் உலோகம் மற்றும் மரத்தாலான கதாயுதத்தை தொடா்ந்து 2 மணி நேரம் சுற்றி சாதனை செய்தாா். மாணவா் பிரவீன் கற்கால போா்க் கருவியான கல்முனை தாக்குதல் குறித்து 5 மணி நேரம் தொடா் சாதனை செய்தாா்.

மாணவா் ராஜேஷ்குமாா் 5 கிலோ கரலாக்கட்டை 3,565 முறை சுற்றி சாதனை முயற்சி மேற்கொண்டாா். இந்த சாதனை செய்த மாணவ, மாணவிகளின் சாதனையை ஜாக்கி புக் ஆப் ரெக்காா்ட்ஸ் உலக சாதனை அமைப்பு நேரில் பதிவு செய்து, அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

நெஞ்சம் மறப்பதில்லை..

SCROLL FOR NEXT