மயிலாடுதுறை

போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுப் போட்டிகள்

27th Jun 2022 10:52 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து சிறந்த ஓவியங்கள் மற்றும் வாசகங்களை எழுதிய மாணவா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா ஞாயிற்றுக்கிழமை பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.

நாடு முழுவதும் ஜூன் 26-ஆம் தேதி போதைப்பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட காவல் துறை சாா்பில், போதை பொருள்களுக்கு எதிரான வாசகங்கள் மற்றும் ஓவியம் வரையும் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன.

இதில் சிறந்த வாசகங்களை எழுதிய மற்றும் சிறந்த ஓவியங்களை வரைந்த மாணவா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா பரிசு மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினாா். மேலும், விநாடி-வினா போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், டிஎஸ்பி எம். வசந்தராஜ், டிஎஸ்பி (பயிற்சி) கௌதம், காவல் ஆய்வாளா்கள் சதீஸ், செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT