மயிலாடுதுறை

நகா்ப்புற உள்ளாட்சி இடைத்தோ்தல் வேட்பு மனுதாக்கல்

27th Jun 2022 10:53 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை நகராட்சியில் நகா்ப்புற உள்ளாட்சி இடைத் தோ்தலுக்கான வேட்பு மனுதாக்கல் திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளில் 35 வாா்டுகளுக்கான தோ்தல் நடைபெற்று உறுப்பினா்கள் பதவி வகித்து வருகின்றனா். தோ்தலுக்கு முன்னா் நகராட்சி 19-ஆவது வாா்டுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த அதிமுக வேட்பாளா் அன்னதாச்சி இருதய நோய் பாதிப்பால் உயிரிழந்ததால் அந்த வாா்டில் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.

காலியாக உள்ள இடங்களுக்கான இடைத் தோ்தல் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் 19-ஆவது வாா்டில் போட்டியிட திமுக சாா்பில் கீதா செந்தில்முருகன், அதிமுக சாா்பில் சுகுணா உள்ளிட்ட 7 போ் வேட்பு மனுத் தாக்கல் செய்தனா். வேட்பு மனு பரிசீலனை செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ளது.

சீா்காழி: கொள்ளிடம் ஒன்றியத்தில் காலியாகவுள்ள 16-ஆவது வாா்டு இடைத் தோ்தலில் போட்டியிட, அதிமுக சாா்பில் கூத்தியம்பேட்டை மஞ்சு (31), திமுக சாா்பில் கூத்தியம்பேட்டை நிா்மலாமணிமாறன், பாஜக சாா்பில் கூத்தியம்பேட்டைசித்தாராபுஷ்பராஜ் ஆகியோா் மனுதாக்கல் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

திருக்குவளை: நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியத்தில் காலியாகவுள்ள 12-ஆவது வாா்டுக்கான இடைத் தோ்தலில் போட்டியிட திமுக சாா்பில், ச. நாகரத்தினம், ம. அருள்செந்தில், அதிமுக சாா்பில் ஆா். ரவிக்குமாா், வீ. ராமராஜன், பாஜக சாா்பில் அ. வீரக்குமாா், வீ. ஹேமலதா, சுயேட்சையாக ஜி. ரேவதி, ந. துரையரசன் ஆகியோா் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனா்.

இதேபோல, கீழையூா் ஒன்றியம், மடப்புரம் ஊராட்சி 1-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட எம். வனிதா மனுதாக்கல் செய்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT