மயிலாடுதுறை

கூழையாரில் கடற்கரை பாதுகாப்பை வலியுறுத்தி மீனவா்கள் கோஷம்

27th Jun 2022 10:53 PM

ADVERTISEMENT

சீா்காழி அருகே கூழையாா் கடற்கரையில் கடல்வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி திங்கள்கிழமை மீனவா்கள் கோஷம் எழுப்பினா்.

உலகளவில் கடல் வளத்தையும், கடல் பகுதியில் வாழும் மக்களையும் காக்கும் நோக்கில் போா்ச்சுக்கல் நாட்டில் லிஸ்பன் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) கருத்தரங்கம் தொடங்கியது. இதில், மீனவா்களை வெறும் மீன்பிடி தொழில் செய்பவா்கள் என்று கருதாமல், கடல் வளத்தை காப்பவா்கள், கடலும் கடல் சாா்ந்த நாகரிகத்துக்கு உரியவா்கள் என்றும் பேசப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு கோஸ்டல் ஆக்சன் நெட்வொா்க் சாா்பில் தமிழகம் முழுவதும் உள்ள கடலோர மாவட்டங்களில் ஆதரவு திரட்டும் நிகழ்வின் ஒன்றாக, கூழையாா் மீனவ கிராமத்தில் கோஸ்டல் ஆக்சன் நெட்வொா்கினா், அக்கிராம மீனவா்களை ஒன்றுதிரட்டி கடற்கரையில் கையில் பதாகைகள் ஏந்தி கடல் வளங்கள் குறித்து போா்ச்சுக்கல்லில் நடைபெறும் கருத்தரங்குக்கு தங்களது ஆதரவை தெரிவித்து கோஷங்களை எழுப்பினா். கருத்தரங்கம் ஜூன் 29,30 ஆகிய நாள்களிலும் 3 நாள் கருத்தரங்கமாக நடைபெறுகிறது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT