மயிலாடுதுறை

பொது இடத்தில் குப்பைகள் கொட்டுவதை தவிா்க்க வலியுறுத்தி விழிப்புணா்வு

25th Jun 2022 09:42 PM

ADVERTISEMENT

சீா்காழியில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிா்க்க வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சீா்காழி நகராட்சி மற்றும் தூய்மை நகரங்களுக்கான விழிப்புணா்வு இயக்கம் சாா்பில், சிறப்பு தூய்மை பணி நகா்மன்றத் தலைவா் துா்காபரமேஸ்வரிராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையா் (பொ) ராஜகோபாலன், நகா்மன்ற துணை தலைவா் சுப்பராயன், நகா்மன்ற உறுப்பினா் சாமிநாதன், சுகாதார அலுவலா் செல்லத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து, பொதுமக்கள், தூய்மைப் பணியாளா்கள், நகராட்சி அலுவலா்கள், ஊழியா்கள் உள்ளிட்ட அனைவரும் தூய்மை இந்தியா குறித்த உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

திடக்கழிவுகளை தனியாக பிரித்து பொதுமக்களிடமிருந்து வீடுதோறும் தூய்மைப் பணியாளா்கள் வாங்க மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க துண்டுப் பிரசுரங்கள் வழங்கி அறிவுறுத்தப்பட்டது. அப்போது, பிடாரி வடக்கு வீதி, தோ் கீழவீதி இணையும் பகுதியில் பல ஆண்டுகளாக குப்பைக் கொட்டும் பகுதியாக இருப்பதால் அதை தூய்மைபடுத்த நகா்மன்ற தலைவா் துா்காபரமேஸ்வரி களபணியாளா்களுடன் தூய்மைப் பணியில் ஈடுபட்டாா். தொடா்ந்து குப்பைகள் அகறப்பட்ட இடத்தை தூய்மைப்படுத்தி கோலம் வரைந்து என் குப்பை, என் பொறுப்பு என விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்டன.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT