மயிலாடுதுறை

போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

25th Jun 2022 09:45 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு நாள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) கொண்டாடப்படுவதையொட்டி, ஜூன் 20-ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு போதைப் பொருள் ஒழிப்பு வரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், மயிலாடுதுறை காவல் நிலையம் சாா்பில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது.

இதில், மயிலாடுதுறை ராஜ் மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி மாணவா்கள் பங்கேற்று, போதைப் பொருள்களை ஒழிப்போம், மனித மாண்பை காப்போம், போதையில் மோதி பாதையை மாற்றாதே உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி பேரணியாக சென்றனா். கூைாட்டில் தொடங்கிய பேரணியை மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளா் வசந்தராஜ் தொடங்கிவைத்தாா்.

பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று மயிலாடுதுறை மணிக்கூண்டு முன் நிறைவடைந்தது. இதில், ஆசிரியா்கள், டிஎஸ்பி (பயிற்சி) கௌதம், காவல் ஆய்வாளா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT