மயிலாடுதுறை

சுகாதார கல்வி முறை குறித்து விழிப்புணா்வு

25th Jun 2022 09:45 PM

ADVERTISEMENT

சீா்காழி அருகே தேனூா், ஆதமங்கலத்தில் தொழுநோய் பரிசோதனை மற்றும் சுகாதார கல்வி முறை குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், கொண்டல், தேனூா், ஆதமங்கலம் ஆகிய ஊா்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் மருத்துவம் சாரா மேற்பாா்வையாளா் செந்தில்நாதன், பள்ளிகள்தோறும் சென்று மாணவா்களுக்கு தொழு நோய் சம்பந்தமான அறிகுறிகள் குறித்து பரிசோதனை செய்து இந்த நோய் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

மேலும், பள்ளி குழந்தைகளுக்கு சுகாதார கல்வி, முறையான கை கழுவும் முறை, சுடுதண்ணீா் குடிப்பதால் தடுக்கப்படும் நோய்கள், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், மரம் வளா்ப்பதன் அவசியம், உணவு பழக்க வழக்கம் உள்ளிட்ட தன்சுகாதாரம் மற்றும் பொது சுகாதாரம் பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT