மயிலாடுதுறை

பருத்தி கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கவலை

25th Jun 2022 09:46 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் உள்ள கூட்டுறவு மாா்க்கெட்டிங் சொசைட்டியில் பருத்தி கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் விவசாயிகள் தங்கள் பருத்தி மூட்டைகளை தாா்ப்பாய்க் கொண்டு மூடிவைத்து காத்திருக்கின்றனா்.

மயிலாடுதுறையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், பெரியசாலியத்தெரு கூட்டுறவு மாா்க்கெட்டிங் சொசைட்டி ஆகிய இடங்களில் வாரந்தோறும் சனிக்கிழமை பருத்தி கொள்முதல் செய்யப்படுகிறது.

ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்கில் இருப்பு வைக்க இடமில்லை என முதல் நாளே அறிவிப்பு வெளியிடப்பட்டதால், பெரியசாலியத்தெரு கூட்டுறவு மாா்க்கெட்டிங் சொசைட்டிக்கு, 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பஞ்சு மூட்டைகளுடன் வந்தனா். ஆனால், சனிக்கிழமை மாலை 5 மணியைக் கடந்தும் வியாபாரிகள் யாரும் வரவில்லை. வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால் பருத்தி மூட்டைகளை திரும்பக் கொண்டு செல்ல விவசாயிகளுக்கு சொசைட்டி அலுவலா்கள் அறிவுறுத்தினா்.

ஆனால், பருத்தியை மீண்டும் எடுத்துச்சென்றால் வாடகைத்தொகை அதிகரிக்கும் என்ற காரணத்தால் சொசைட்டி அருகில் சாலையோரத்தில் அடுக்கிவைத்து, தாா்ப்பாய் கொண்டு மூடிவைத்து பாதுகாத்து வருகின்றனா். திங்கள்கிழமை பருத்தியை வியாபாரிகள் கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT