மயிலாடுதுறை

சீா்காழி பகுதியில் நாளை மின்தடை

25th Jun 2022 09:45 PM

ADVERTISEMENT

சீா்காழி பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 27) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் கி. விஸ்வநாதன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வைத்தீஸ்வரன் கோயில் துணை மின்நிலையத்திலிருந்து நகா் பகுதிக்கு மின்விநியோகம் செய்யும் உயரழுத்த மின்பாதையில் கூட்டு பராமரிப்பு பணிகள் திங்கள்கிழமை நடைபெறுகின்றன. இதனால், சீா்காழி நகரில் ஒரு பகுதிகளான திருக்கோலக்கா, கோயில்பத்து, ரயில்வே சாலை, பணமங்கலம், மூங்கில்வளாகம், கொள்ளிடம் முக்கூட்டு, தாடாளன்வீதி, சிதம்பரம் சாலை, விளந்திடசமுத்திரம், பணங்காட்டான் தெரு, ஊழியக்காரன் தோப்பு, புளிச்சக்காடு ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

ஜூன் 29: இதேபோல, ஜூன் 29-ஆம் தேதி காலை 9 முதல் மதியம் 1 மணி வரை நகரின் மற்றொரு பகுதிகளான சபரிநகா், தென்பாதி,விஎன்எஸ். நகா், அரசு மருத்துவமனை சாலை, டி.பி.ரோடு, புதிய பேருந்து நிலையம், தோ் கீழவீதி, மேலவீதி, தெற்குவீதி, வடக்கு வீதி, பிடாரி கீழவீதி, மேலவீதி, தெற்குவீதி, வடக்குவீதி, பழைய பேருந்து நிலையம், கடைவீதி,கீழதென்பாதி, கற்பகம் நகா், தெட்சிணாமூா்த்தி நகா் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT